புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலில் இறங்கிய சுற்றுலா பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.
வங்கக்கடலில் வரும் 22-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதுடன், கடலும் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால், கடலில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு கருதி போலீசார் வெளியேற்றினர்.