இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் - சிறப்பு தொகுப்பு!
Oct 17, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ஏற்றுமதியை முற்றிலுமாக அழித்துவிடும் என்று அந்நாடுகளின் ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர்

‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று போற்றப்படும் இந்தியா – ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தகம் 2027ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாமிடத்திலும் இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளது.

இரு தரப்புக்கும் வர்த்தகப் பாதுகாப்பை ஏற்படுத்தித் தரும் இந்த ஒப்பந்தத்தால் நாட்டின் ஜவுளிதுறை 172 பில்லியனில் இருந்து 350 பில்லியன் அமெரிக்கா டாலராக உயரும் என்றும் 37 பில்லியனில் இருந்து 100 பில்லியன் அமெரிக்க டாலராக ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆண்டுக்கு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயத்த ஆடை தேவை உள்ளது.இதில் இருந்தாலும், 105 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகளை ஐரோப்பிய நாடுகளே உற்பத்தி செய்துவிடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ,மொத்த ஜவுளி மற்றும் ஆயுத்த ஆடைகள் இறக்குமதியில் 50 சதவீதத்துக்கும் மேல் பாகிஸ்தானும் வங்கதேசமும் வைத்துள்ளன.

ஆசியாவுக்கு வெளியே பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பிய யூனியன் உள்ளது.பாகிஸ்தானில் இருந்து ஜவுளி மற்றும் ஆடைகளையே ஐரோப்பிய ஒன்றியம் அதிகம் இறக்குமதி செய்கிறது.

2014 முதல், பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜிஎஸ்பி பிளஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 85 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கு அளித்துள்ளது ஐரோப்பிய யூனியன்..

2024-ல் பாகிஸ்தானின் மொத்த வர்த்தகத்தில் 12.4 ஆக இருந்தது. அதே நேரத்தில், பாகிஸ்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் 48-வது வர்த்தக நாடாக உள்ள பாகிஸ்தான், ஏற்றுமதி செய்யும் மொத்த பொருட்களில் 85 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கு பெற்றுள்ளது.

இதேபோல் குறைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்து, ‘ஆயுதங்கள் தவிர அனைத்தும்’ (EBA) என்ற திட்டத்தின் கீழ் வங்கதேசமும் ஐரோப்பிய யூனியனுக்கு கணிசமான அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 36-வது பெரிய வர்த்தக நாடாக வங்கதேசம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதி செய்த மொத்தப் பொருட்களில் கிட்டத்தட்ட 94 சதவீதம் வங்கதேசத்தில் இருந்து வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு கிடைத்த எந்த வரி சலுகையும் முன்னுரிமையும் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு இல்லாமல் இருந்தது. ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு மிகவும் விரும்பப்படும் நாடு என்ற அடிப்படையில் வரி விதிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக உதாரணமாக, ஜவுளிகளுக்கு 12 சதவீத வரியும் கடல் மற்றும் கடல் உணவுப் பொருட்களுக்கு 26 சதவீத வரியும் விதிக்கப் பட்டது.

ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் இந்திய ஐரோப்பிய யூனியன் இருதரப்பு வர்த்தகம் 90 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் ஒன்பதாவது பெரிய வர்த்தக நாடான இந்தியா 2024-ல் ஐரோப்பிய யூனியனுடன் 120 பில்லியன் யூரோ மதிப்புடைய வர்த்தகத்தைச் செய்துள்ளது. இருந்தது. இது இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 11.5 சதவீதம் ஆகும்.

இந்நிலையில், இந்திய ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவின் 99 சதவீதத்துக்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்கள், சிறப்பு சலுகைகளுடன் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைய உள்ளது.

இதனால் 7 பில்லியன் டாலர்களாக இருக்கும் இந்திய ஏற்றுமதி, இனி 40 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி ஆண்டுதோறும் 25 சதவீதம் வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொருபுறம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மட்டும் நம்பியிருக்கும் பாகிஸ்தானின் ஏற்றுமதி வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானை விட வங்கதேசத்தின் நிலைமை மிக மோசமானதாக உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் குறைந்த வளர்ந்த நாடு என்ற தகுதியை இழந்துள்ள வங்கதேசம் முற்றிலுமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக்கி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்திய ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ஏற்றுமதியாளர்களை மட்டுமல்ல அந்நாடுகளின் அரசையும் தூக்கமில்லாமல் செய்துள்ளது.

Tags: pakistanBangladeshhistoriccountriescountries agreementIndia-European Union agreement
Share
Tweet
SendShare
Previous Post

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

Next Post

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies