தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!
Sep 2, 2026, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 09:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேச பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு சுமார் 7,84,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது பாகிஸ்தான் அரசையும் அந்நாட்டு பாதுகாப்பு வல்லுனர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

2014 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றது முதல், நாட்டின் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருகிறது.

2014-ல் 2.29 லட்சம் கோடியாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு, கடந்த நிதியாண்டில் 6.81 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்புக்காக 7.85 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

 

இது வரும் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதமாகும். மேலும் கடந்த ஆண்டில் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை விட சுமார் 24 சதவீதம் அதிகமாகும்.

ராணுவத் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கும் இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்கவும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இது தவிர முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின குடும்பத்தினரின் நலனுக்காக கடந்த நிதியாண்டை விட 45.49 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

இது வழக்கமானதல்ல என்றும் இது இந்தியா எந்த அளவுக்குத் தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை விமர்சகரான Qamar Cheema கமர் சீமா ஒரு காணொளியில் கூறியுள்ளார்.

இந்த பட்ஜெட் ஒதுக்கீடு, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி அழுத்தங்கள் இருந்த போதிலும் இந்தியா ரஷ்யாவின் சுகோய் 57 போன்ற மேம்பட்ட போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் என்பதை உறுதி படுத்துவதாக Qamar Cheema கமர் சீமா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தியாவின் அதிரடி தாக்குதலைத் தாங்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியதால் ஆப்ரேஷன் சிந்தூரை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூனில் பாகிஸ்தான் அரசு தனது மொத்த பட்ஜெட்டில் 14.5 சதவீதத்தை ஒதுக்கி நாட்டின் இராணுவப் பட்ஜெட்டை 20.2 சதவீதமாக அதிகரித்தது. அதாவது 428 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை 2,550 பில்லியன் ரூபாயாக அதிகரித்தது. இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.97 சதவீதம் ஆகும்.

உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவின் பட்ஜெட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிட முடியாது என்றாலும், இந்தியாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு பாகிஸ்தானைவிட ஒன்பது மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியா இராணுவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது, சீனாவை விட பாகிஸ்தானுக்கே அதிக சவால்களை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: budget 2026 armySecurity funding allocationpakistanindian armyworldbudget 2026
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies