திருப்பூர் மாவட்டம் உடுமலை – மூணாறு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
கொட்டு மழையிலும், ஒற்றை காட்டு யானை, உடுமலை – மூணாறு சாலையில் வந்த வாகனங்களை செல்லவிடாமல் குறுக்கே நின்று விளையாட்டு காட்டியது.
இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.