காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, கன்னியம்மன் கோயிலில், பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர்.
சிலாம்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த சுயம்பு ராஜ கண்ணியம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில், குழந்தை வரம் வேண்டியும், நோய் நொடிகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் பொதுமக்கள் விரதம் இருந்து அம்மனை வேண்டிக்கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.