கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் கல்லுபாலம் மகாதேவர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது.
ஆயிரத்து 200ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், மகா கும்பாபிஷேக விழா கடந்த 17 -ஆம் தேதி தொடங்கியது.
கணபதி ஹோமம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, யாக குண்டத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர், கோயில் விமான கும்பத்தில் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
விழாவில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.