நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு தண்ணீர் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் என்கின்ற இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
“தொடர் மழை காரணமாக, மழை நீருடன் சேர்ந்து சாயப்பட்டறை தொழிற்சாலை கழிவு நீரை சிலர் வெளியேற்றி வருகின்றனர்.
இதனால், 25 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது” என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.