அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
அட்லாண்டாவில் உள்ள மோர்ஹவுஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களின் ஒரு பரிவினர், திரும்பி அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்த மேடையை விட்டு வெளியேறுங்கள் என கோஷமிட்டனர்.