வங்கித் துறையின் நிகர லாபம் முதல் முறையாக 2024-ம் நிதியாண்டில் 3 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது.
பொதுத்துறை, தனியார் வங்கிகள் கடந்த நிதியாண்டிற்கான வரவு செலவு தாக்கல் செய்த விபரங்களின்படி, 2024-ம் நிதியாண்டில் வங்கித் துறையின் நிகர லாபம் 3 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருப்பது தெரியவந்திருக்கிறது.
இதில், பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது முந்தைய நிதியாண்டை விட 34 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது.
முந்தைய நிதியாண்டில், 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த தனியார் வங்கிகளின் நிகர லாபம், 39 சதவீதம் அதிகரித்து 3 லட்சத்து 10 ஆயிரம் கோடியாகவும், இதில், வங்கித்துறையின் நிகர லாபம், தகவல் தொழில்நுட்பத் துறையை விட அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், தகவல் தொழில்நுட்பத்துறையின் நிகர லாபம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடியாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் 4 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.