புதுக்கோட்டை மாவட்டம், சங்கம் விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சங்கம்விடுதி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தனர். அதன் படி சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
 
			 
                    















