சென்னை, திருவொற்றியூர் அருகே உள்ள ஸ்ரீகல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு பெருமாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்னர் மேளதாளங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியை ஏற்றப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.