சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 55 ஆயிரத்தை கடந்து, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 50 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 3.50 காசுகள் உயர்ந்து 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து நூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரே நாளில், தங்கம், வெள்ளியின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.