ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
பாமியான் நகரில் சுற்றுலா வந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் அமைப்பு, ஸ்பெயினை சேர்ந்த 3 கிறிஸ்தவர்கள், 3 ஷியா பிரிவினர் என ஆறு பேரை தங்கள் அமைப்பினர்தான் குறிவைத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளது.