உலகின் குள்ளமான பெண்ணை தி கிரேட் காளி ஒரே கையில் தூக்கியது சமூக வலைதளத்தில் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த பெண் ஜோதி ஆம்கே. 30 வயதாகும் இவர், வெறும் 62.8 செ.மீ. உயரத்துடன் உலகின் குள்ளமான பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரை மல்யுத்த வீரர் தி கிரேட் காளி ஒரே கையில் தூக்கியது சமூக வலைதளத்தில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரானது. அதில் ஃஷோபாவில் அமர்ந்தவாறு தி கிரேட் காளி அந்தப் பெண்ணை தனது வலது கையில் தூக்குவதாக பதிவாகியுள்ளது. அதற்கு ஜோதி ஆம்கே சிரித்தபடியே எதிர்வினையாற்றுகிறார்.
இருந்தாலும், வயதுவந்த ஒரு பெண்ணை இப்படி தி கிரேட் காளி ஒரே கையில் தூக்கியதற்கு பலரும் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.