உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வந்த 126 வது மலர் கண்காட்சி இன்று மாலை பரிசளிப்பு விழாவுடன் நிறைவடைகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. 11 நாட்களாக நடைபெற்ற மலர் கண்காட்சியில் பல லட்சம் வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு பார்வையாளர்களை கவரும் வண்ணம் காட்சிபடுத்தப்பட்டது. அதேபோல சுமார் 1 லட்சம் ரோஜா உள்ளிட்ட மலர்களை கொண்டு டிஸ்னி வோல்ட் கதாபாத்திரங்கள், மலை ரயில் வடிவம் ஆகியவை உருவாக்கப்பட்டது.
இதனை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்நிலையில், உதகை மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.