சிவகங்கையில் உள்ள சேவுகப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிங்கம்புணரியில் அமைந்திருக்கும் சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.