பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி ஊழியரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமாந்துறை பகுதியில் இயங்கி வரும் சுங்கச் சாவடியில் திமுக கொடி கட்டி வந்த சொகுசு கார், பாஸ்ட் டேக் மூலம் பணம் கட்ட முயன்றபோது அது காலாவதியானது தெரியவந்தது.
இதையடுத்து, ரொக்கமாக கட்டணம் செலுத்துமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் சுங்க ஊழியர்களை சரமாரியாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.