சிவகங்கையில் இந்தியன் வங்கியின் பூட்டை வெடிபொருட்கள் வைத்து உடைக்க முயற்சிக்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மானாமதுரை அண்ணா சிலை பகுதியில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கியில், மர்மநபர் கொள்ளையடிக்க முயற்சித்தார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் மர்ம நபர் ஒருவர் வங்கியின் பூட்டுக்குள் வெடி பொருட்களை வைத்து அதை பற்ற வைக்கும் சிசிடிவி காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.