புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி மாத வளர்பிறை துவாதசி பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி நகரப்பகுதியான மகாத்மா காந்தி வீதியில் பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலில், வைகாசி மாத வளர்பிறை துவாதசி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதனையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.