இண்டி கூட்டணியின் வாக்கு வங்கி அரசியலை மக்கள் நம்பமாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களவை 5ஆம் கட்ட தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மத்தியில் வலுவான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள அவர், இண்டியா கூட்டணி முற்றிலும் செயலிழந்து மனச்சோர்வடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாரமுல்லா தொகுதியில் 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பது, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என கூறியுள்ளார்.