குடிபோதையில் 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சிறுவனின் தந்தையைக் காவல்துறையினர் கைது செய்தனர். குறுகிய பாதையில் மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி வந்த அச்சிறுவன் இரு சக்கர வாகனம் மீது மோதியதில், ஐடி நிறுவன ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
விபத்துக்கு காரணமான சிறுவனுக்கு 17 வயதே ஆவதால், அவருக்கு புனே நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்நிலையில் குற்றத்தின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு, அச்சிறுவனை வயது வந்தோராகக் கருத வேண்டுமென காவல்துறை நீதிமன்றத்தை அணுகியுள்ளது.