கோடை காலத்தை முன்னிட்டு மின்சார தேவை அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவு நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் கூடுதலாக 147 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளதாகவும், கோடையை சமாளிக்க அனல் மின் நிலையங்களுக்கு இது உதவும் என்றும் நிலக்கரி அமைச்சகம் கூறியுள்ளது.
இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 117 மெட்ரிக் டன் மட்டுமே நிலக்கரி கையிருப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.