பிரிட்டனில் எச்ஐவி உள்ளிட்ட நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் செலுத்தப்பட்டு 3,000 பேர் பலியான அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த 1970 முதல் 1990-ஆம் ஆண்டு வரை கலப்பட ரத்தம் செலுத்தப்பட்டதால், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பிரிட்டனில் பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இதில் 3 ஆயிரம் பேர் மரணம் அடைந்துவிட்டனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணைக்குப் பின்னரே இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பிரிட்டன் தேசிய சுகாதார சேவைத் துறையை விசாரணைக் குழு கடுமையாக கண்டித்துள்ளது.