நாடாளுமன்ற தேர்தலில் 310 இடங்களுக்கு மேல் பெற்று விட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசியர்,
ஒடிசா மிக அழகான மாநிலம் என்றும், , நீண்ட கடற்கரை, ஏராளமான கனிம வளம், கடின உழைப்பை தரும் இளைஞர்கள் உள்ளதாக கூறினார்.
ஆனால் மாநிலத்தில் கடின உழைப்பை கொடுக்கும் முதல்வர் இல்லை என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால் கடுமையாக உழைக்கும் இளம் முதலமைச்சரை அளிப்போம் என தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், பாஜக கூட்டணி 310 இடங்களுக்கு மேல் பெற்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்