கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும்!
Aug 21, 2025, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும்!

Web Desk by Web Desk
May 21, 2024, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அம்மோனியா வாயு கசிவு விவகாரத்தில் கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் கடந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதி கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக 5 கோடியே 92 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், தற்காலிகமாக ஆலைய மூட உத்தரவிட்ட தமிழக அரசு, ஆலையை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தது.

இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் கோர்லபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், ஆலையின் உட்கட்டமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் என தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு வழங்கிய 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை ஆலை நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆலை மீண்டும் இயங்கும் முன்பு தமிழ்நாடு கடல்சார் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உள்ளிட்ட துறைகளிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்றும்,

மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தொழில்நுட்ப குழவினர் ஆலையை கண்காணித்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை எண்ணூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Penalty amount imposed on Coromandel plant should be used for environmental protection in Ennore!
ShareTweetSendShare
Previous Post

எஸ்பிஐ தலைவரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை ஒத்திவைப்பு!

Next Post

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை!- கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி?

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!

BE கலந்தாய்வு நிறைவு – 1.45 லட்சம் பேருக்கு சீட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies