இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பில் குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் கலந்துகொள்வதற்காக ஜெக்தீப் தன்கர் நாளை ஈரான் செல்வார் என கூறப்படுகிறது.