தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில், “மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், உளுந்து, எள், கடலை மற்றும் வாழை உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக இந்த பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது.
இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கியதில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. எனவே சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.