தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்திரம் செய்யுமாறு தமிழக அரசுக்கு மக்கள் கல்விக் கூட்டியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார்,
அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மதிப்பெண்கள் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டை பின்பற்றியும், ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.