நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அம்மா உணவகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே, 25 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உணவகம் கட்டப்பட்டது.
இந்நிலையில், திடீர் மழை காரணமாக, மேற்கூரை முழுதும் இடிந்து விழுந்தது. இதில், ஐந்துக்கும் மேற்பட்ட மின்விசிறிகள் முழுதும் சேதமடைந்தது.
இந்த விபத்து அதிகாலையில் நடைபெற்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
எனவே, இடிந்த பகுதியை ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தி, முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுத்துள்ளது.