பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் 1.88 மீட்டர் தூரம் எறிந்து மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானில் கோபி நகரத்தில் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்64 பிரிவில் நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான இந்தியாவை சேர்ந்த சுமித் ஆன்டில் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு சகஇந்தியர் சந்தீப் சவுத்ரி 60.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும், இலங்கையின் துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.
இதேபோல், பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் 1.88 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.
இதுவரை இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதேபோல், சீனா 15 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலமும், பிரேசில் 14 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.