ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பக்தர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொள்ளும் வழிபாடு நடைபெற்றது.
நீராவி கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் கரக உற்சவ விழாவை ஒட்டி ஒவ்வொரு நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் பங்கேற்ற இவ்விழாவில் பக்தர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர். பின்னர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட அம்மன், கோயிலுக்கு வந்தடைந்ததும் தீபாராதணை காட்டப்பட்டது. இதில் திரளான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்