ஆந்திராவின் பால்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பல்நாடு மாவட்டத்தின் மச்சர்லா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஒய்எஸ்ஆர் எம்எல்ஏ ராமகிருஷ்ண ரெட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இது தொடர்பாக காவல்துறையிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு அளித்துள்ள தேர்தல் குழு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.