விருதுநகரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பனராஸிலிருந்து இருந்து கன்னியாகுமரி செல்லும் காசி தமிழ் சங்கம் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக விருதுநகர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விருதுநகருக்கு சென்ற ரயிலில் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய பெரியசாமி என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் இரண்டரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.