புத்த பூர்ணிமா இன்று கொண்டாடப்படும் நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இரக்கத்தின் திருவுருவமான புத்தர், உண்மை, அகிம்சை, நல்லிணக்கம் மனிதநேயம் மற்றும் அனைத்து உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்தும் செய்தியை வழங்கியுள்ளதாகவும், சமூக நல்லிணக்கம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அவரது போதனைகளை குடிமக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், கடந்த தசாப்தத்தில், புத்தரின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கு வேரூன்றிய உறுதிப்பாட்டை நமது பணி எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.