ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாசை இழந்த பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துவிட்டது.