கனமழை காரணமாக தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரியகுளத்தில் உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது கன மழை பெய்ததால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி 57 அடி நீர் மட்டம் கொண்ட மஞ்சளார் அணை 50 அடியை எட்டியது.இந்நிலையில், 51 அடியாக எட்டினால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.