உதகையில் பெய்து வரும் கனமழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகழ் பெற்ற படகு இல்லத்தில் படகு சவாரி இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மிதி படகுகள், துடுப்பு படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்ததால், சாலையோர வியாபாரிகள், சிறு வணிக நிறுவனங்கள், உள்ளூர் வாடகை ஓட்டுநர்கள் பாதிப்படைந்தனர்.