நாமக்கல் அருகே கஞ்சா போதையில் லாரியை இயக்கிய ஓட்டுநரால், பள்ளி மாணவி உயிரிழந்தார்.
திருச்சியை சேர்ந்த கனிஷ்கா என்ற மாணவி, நாமக்கல்லை அடுத்த சின்னமுதலைப்பட்டியில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க, தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே கனிஷ்கா உயிரிழந்தார்.
அவரது உடலை மீட்ட போலீசார், உடல் கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் கஞ்சா போதையில் லாரியை இயக்கியது தெரியவந்தது.