சென்னையில் பல்லி இருந்த குளிர்பானத்தை அருந்திய 2 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முகப்பேரை சேர்ந்த யுவராஜ் வீட்டின் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மில்ஷேக் வாங்கி தனது இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.
அதைக் அருந்திய குழந்தைகள் துர்நாற்றம் வந்ததால் அதைப் பாத்திரத்தில் ஊற்றி பார்த்தபோது, குளிர்பானத்தில் பல்லி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜ், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.