திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சாமி மலைக்கோயிலில் சுமார் இரண்டே கால் கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள், கடந்த 12 நாட்களில் பெறப்பட்ட காணிக்கைகள் மூலம் நிரம்பின.
இதனையடுத்து உண்டியல்களை திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில், ரொக்கமாக 2 கோடியே 23 லட்சத்து 28 ஆயிரத்து 926 ரூபாய் வருவாயாக கிடைத்தது தெரியவந்தது.
மேலும் 545 கிராம் தங்கம், 8 ஆயிரத்து 490 கிராம் வெள்ளி, 362 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளன. காணிக்கைகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.