குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறியும் வகையில் சென்சார் கருவிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அண்ணா பல்கலைக்கழக குழுவினரும், ஐஓடி ஆராய்ச்சி குழுவினரும் ஆங்காங்கே சென்சார் கருவிகளை பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி நீர்வரத்து அதிகரிக்கும்போது அதுபற்றி எச்சரிக்கும் விதமாக ஒலி எழுப்பும் கருவியையும், மழையின் அளவை தெரிந்துகொள்ளும் விதமாக சென்சார் மழைமாணிகளையும் ஆங்காங்கே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.