நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, நீரிழிவு நோய்க்கான அடிப்படை பரிசோதனை முடிவுகள் மற்றும் புள்ளி விவரங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக மென்பொருள் நிறுவனம் ஒன்றுடன் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதிக பாதிப்பு உள்ள நோயாளிகளை முன்கூட்டியே அறிந்து சிகிச்சையளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுமென மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.