மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியின் 146வது பாடப்பிரிவின் பட்டமளிப்பு விழாவில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கலந்து கொண்டார்.
புனேவில் உள்ள கடக்வாஸ்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து 205 ராணுவ வீரர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.