ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பாலியல் புகாரில் சிக்கிய டாக்டரை கைது செய்ய போலீஸ் வாகனம் அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
பெண் மருத்துவர் ஒருவரை சதீஷ்குமார் என்ற மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
அவரை கைது செய்ய 6-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு போலீஸ் வாகனம் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.