ஜப்பானில் திமிங்கல வேட்டைக்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக கப்பல் மூலம் டோக்கியோ துறைமுகம் தனது முதல் திமிங்கலத்தை வேட்டையாடியது.
திமிங்கல வேட்டையை துவங்க உள்ளதாக ஜப்பான் ஏற்கனவே அறிவித்த நிலையில், சர்வதேச திமிங்கல வேட்டை தடுப்பு ஆணையத்தில் இருந்தும் விலகியது.
இந்நிலையில் டோக்கியோவில் தயாரிக்கப்பட்ட காங்கே மாரு என்ற கப்பல் மூலம் அதிகாரிகள் திமிங்கலத்தை வேட்டையாடினர்.
மேலும், அதன் இறைச்சி உள்ளிட்டவை விற்பனைக்கு சந்தைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.