ஸ்பெயினில் உணவகம் இடிந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மஜோர்கா கடற்கரையில் உள்ள உணவகத்திற்கு ஐரோப்பியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம்.
3 மாடிகள் கொண்ட இந்த உணவகத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.