தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் அணி வெற்றி பெற்றது.
செயற்கை புல்வெளி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
லீக் ஆட்டத்தில் போபாலைச் சேர்ந்த நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் , சென்னையை சேர்ந்த இன்கம் டேக்ஸ் அணியும் மோதின. இதில் 1 – 0 என்ற கோல் கணக்கில் சென்னை இன்கம் டேக்ஸ் அணி வெற்றி பெற்றது.