கேரளாவில் 7 கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்கிளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் 115.6 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகும் என்றும், விழிஞ்சம் முதல் காசர்கோடு வரை 3.3 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்பும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.