புதுக்கோட்டை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
பெருமருதூரில் அமைந்துள்ள ஸ்ரீபால தண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர், சிவகங்கை, தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த10 நடுமாடு ஜோடிகளும், 27 பூஞ்சிட்டு ஜோடிகளும் கலந்து கொண்டன.
போட்டி தொடங்கியவுடன் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இறுதியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது.