வேலூரில் ரசாயன பொடி தூவி பழுக்க வைத்த ஒன்றை டன் மாம்பழத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேண்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் ரசாயன பொடி தூவி மாம்பழங்கள் பழுக்க வைப்பதாக வந்த தகவலின் பேரில், உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கடைகளை பூட்டிவிட்டு, 5 மாம்பழ வியாபாரிகள் ஓட்டப்பிடித்தனர். இதையடுத்து, மீதமுள்ள கடைகளில் சோதனை செய்தபோது, ரசாயனப் பொடி தூவி பழுக்க வைக்கப்பட்ட ஒன்றை டன் மாம்பழத்தை பறிமுதல் செய்தனர்.